அன்பான தாயக உறவுகளுக்கு,

Friday, July 20, 2018

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர்ப் பிரதேசத்திற்குட்பட்ட,  பிற்படுத்தப்பட்ட மக்கள் அதிகமாக வாழும் பிரதேசங்களான சீனன்வெளி, நல்லூர் ஆகிய கிராமங்களிலிருந்து  எமது அமைப்புக்கு கிடைத்த கோரிக்கைகளை உங்கள் முன் வைக்கிறோம்.

வளப் பற்றாக்குறை நிறைந்த முன்பள்ளிகளின் நான்கு ஆசிரியைகள், தமது பணிக்காக பல கிலோமீற்றர் தூரம் நடந்து சென்று கல்வி கற்பிக்கும் கஷ்டமான நிலையை விளக்கியும், மிகக் குறைவாக கிடைக்கும் தமது வேதனம் அதிகரித்து வழங்கப்பட வேண்டும் என்கின்ற எதிர்பார்ப்பை விளக்கியும் சம்பந்தப்பட்ட பிரதேசப் பாடசாலை அதிபர்களின் பரிந்துரைகளுடன் இக் கோரிக்கைகளை அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், இக் கோரிக்கைகள் கிழக்கு மாகாண பாலர் பாடசாலைக் கல்விப் பணியகத்தின் மாவட்ட வெளிக்கள உத்தியோகத்தரினாலும் வழிமொழியப்படுள்ளன.

கடந்த காலங்களைப் போலவே FEED அமைப்பு, எமது சமூகத்தின் ஆரம்பக் கல்வித்துறை சார்ந்த அபிவிருத்திக்காக உங்கள் பெறுமதியான ஆதரவினை எதிர்பார்க்கிறது.

தலைமைப் பணிமனை
கல்விப் பொருளாதார அபிவிருத்தி அமைப்பு
(FEED )
மேலும்....

அன்பான தாயக உறவுகளுக்கு,

கல்வி, பொருளாதார அபிவிருத்தி அமைப்பு (FEED ) எனும் அமைப்பினராகிய நாம், எமது மின்னஞ்சல் முகவரியை, இம் மாதம் முதலாம் திகதி தொடக்கம் (01.07.2018) மாற்றியமைத்துள்ளோம் என்பதனை தங்கள் அனைவரினதும் கவனத்திற்கு தர விரும்புகிறோம்.

இனிவரும் நாட்களில் எமது தகவல் பரிமாற்றங்களிற்கு மின்னஞ்சல் பயன்படுத்தப்படும் அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் info@feedtamils.org எனும் புதிய  மின்னஞ்சல் முகவரியே பயன்படுத்தப்படும்.

நீங்களும், எம்முடன் மேற்கொள்ளுகின்ற அனைத்துத் தொடர்பாடல்களிற்கும் info@feedtamils.org எனும் புதிய  மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தலைமைப் பணிமனை
கல்வி, பொருளாதார அபிவிருத்தி அமைப்பு
(FEED )மேலும்....

கருநாட்டுக்கேணி அ.த.க பாடசாலையின் மாணவர்களுக்கு FEED அமைப்பினால் சீருடைக்கான கழுத்துப்பட்டிகள் (TIE) வழங்கிவைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் தென் பகுதியில், மிகவும் நெருக்கடிக்குள்ளாகிய சூழலில் இயங்கி வரும் கிராமங்களில் ஒன்றான கருநாட்டுக்கேணி கிராமத்தின் அரச பாடசாலையில் கல்வி பயிலும்  தரம் 05 வரையிலான 40 மாணவர்கள் அனைவருக்கும் கழுத்தில் அணியும் tie  வழங்கப்பட்டுள்ளது. 

கடந்த சில வருடங்களாகவே இப்பாடசாலை மாணவர்கள் tie எதுவும் அணியாமலேயே பாடசாலைக்குச் சென்று வரும் நிலையில் இருந்தனர். கடற்றொழிலையும் விவசாயத்தையும் தொழிலாகக் கொண்ட ஏழைக் குடும்பங்கள் அதிகம் உள்ள இக்கிராமத்தில் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் மூலம் tie பெற்றுக் கொடுக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சியும் வெற்றியளிக்கவில்லை.

இந் நிலையில், பாடசாலை அதிபர் திரு. மயில்வாகனம் சுரேஷ்தரன் அவர்கள் எமது FEED அமைப்பிடம் முன் வைத்த கோரிக்கையினை ஏற்று பாடசாலை மாணவர்கள் அனைவருக்கும் கழுத்துப்பட்டி (tie ) வழங்கப்பட்டிருந்தது.

26.06.2018 அன்று பாடசாலையில் அதிபரின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், FEED அமைப்பின் செயற்பாட்டாளர்கள், கனடாவைச் சேர்ந்த திரு. பேரானந்தம், திரு. சிவப்பிரியன், கமக்கார அமைப்பின் தலைவர் திரு. கேதீஸ்வரன், கருநாட்டுக்கேணி முன்பள்ளி ஆசிரியை திருமதி. கே. காயத்திரி, பாடசாலை உப அதிபர், ஆசிரியர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும்....

தொலைதூரம் நடந்து சென்று கல்வி கற்கும் வறியகுடும்பத்தின் மாணவிக்கு FEED அமைப்பினால் துவிச்சக்கரவண்டி வழங்கிவைப்பு

புதுக்குடியிருப்பு, புதியகுடியிருப்பு 10ம் வட்டாரத்தைச் சேர்ந்த,  புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் 7 ம் தர மாணவி தேவராசா கயல்விழிக்கு,  தனது கல்வி நடவடிக்கையை சீராக முன்னெடுக்கக் கூடிய வகையில் துவிச்சக்கரவண்டி ஒன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மிகவும் வறிய நிலையில் வாழும் பெற்றோரின் கோரிக்கைக்கு அமைவாக, கடந்த 26.06.2018 அன்று இடம்பெற்ற கையளிப்பு நிகழ்வில் FEED அமைப்பின் செயற்பாட்டாளர்களுடன் அமைப்பின் பிரதேச ஒருங்கிணைப்பாளர் திரு. நகுலன், கனடாவில் இருந்து வருகை தந்திருந்த திரு. பேரானந்தம் (சீலன் ), திரு. சிவப்பிரியன் ஆகியோருடன் கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதி மற்றும் குடும்பத்தினரும் கலந்து கொண்டிருந்தனர்.

நீண்ட தூரம் சென்று பாடசாலைக் கல்வியையும்,  மாலைநேரக் கல்வியையும் மேற்கொண்டு வரும் மாணவி தே. கயல்விழிக்கு இவ்வுதவி பெறுமதியாக அமையும் எனத் தெரிவித்த பெற்றோர் feed அமைப்புக்கு தமது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
மேலும்....

செங்கற்படை கோரிக்கை

அன்பான தாயக உறவுகளுக்கு,

02/06/2018 அன்று வவுனியா, வேலன்குளம் செங்கல்படை திருக்குமரன் வித்தியாலயத்திற்கு feed அமைப்பினர் சென்றிருந்தபோது, பாடசாலையின் மிக அவசியமான தேவையாக உள்ள நீர்ப் பிரச்சினை பற்றி கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

எமது feed அமைப்பினரிடம், கல்வித்துறை சார்ந்து முன்வைக்கப்பட்ட மற்றுமொரு கோரிக்கையான இதனை உங்கள் முன்வைக்கிறோம். 

கடந்தகாலங்களைப் போலவே feed அமைப்பு, எமது சமூகத்தின் கல்வித்துறை சார்ந்த அபிவிருத்திக்காக உங்கள் பெறுமதியான ஆதரவினை எதிர்பார்க்கிறது.

தலைமைப் பணிமனை
கல்விப் பொருளாதார அபிவிருத்தி அமைப்பு
(FEED )

மேலும்....

வவுனியா, கள்ளிக்குளம் நாவலர் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா - கல்விப் பொருளாதார அபிவிருத்தி அமைப்பு (FEED ) இன் கட்டுமாணம் திறந்து வைப்பு

Friday, June 22, 2018

கடந்த 01.06.2018 அன்று வவுனியா, ஓமந்தை, கள்ளிக்குளம் நாவலர் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டுப் போட்டி பள்ளி ஆசிரியைகளின் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில், அண்மையில் FEED அமைப்பினால் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டிருந்த பிரதான வாயில்,  நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட FEED அமைப்பின் பிரதான செயற்பாட்டாளர் கே. என். இரட்ணலிங்கம் அவர்களினால்  திறந்து வைக்கப்பட்டது. 

மிகவும் சிறப்பான முறையில் நடாத்தப்பட்ட விளையாட்டுப் போட்டியின் சிறப்பு விருந்தினர்களாக கள்ளிக்குளம் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், கள்ளிக்குளம் கமக்கார அமைப்பின் தலைவர், கருங்காலிக்குளம் அ.த.க பாடசாலை ஆசிரியை, மாமடு காவல் நிலையத்தின் அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டிருந்ததுடன் பெற்றோர்களும், பாடசாலை நலன்விரும்பிகளும், முன்பள்ளியின் பழைய மாணவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.


மேலும்....

மன்னார், மாந்தை மேற்கு பிரதேசத்தின் சவரிக்குளம் கிராமத்தில் வறிய குடும்பத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவிக்கு FEED அமைப்பினால் மடிக்கணனி அன்பளிப்பு

FEED அமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க,  அவுஸ்திரேலியாவின் சிட்னியில் வதியும் வேலாயுதபிள்ளை யோகநாதன் அவர்களால் பாலசுப்ரமணியம் சிவசுதன் அவர்களின் உதவியுடன் அனுப்பிவைக்கப்பட்டிருந்த மடிக்கணணி, கடந்த 02.06.2018 அன்று மன்னார், கோவில்குளம், சவரிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவி ஒருவருக்கு வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவமும் தகவல் தொழில்நுட்பமும்  பீடத்தின் 02 ம் வருட மாணவியான சிவநேசன் கிருசாந்தி என்பவருக்கே  மடிக்கணணி வழங்கப்பட்டுள்ளது.

சவரிக்குளம் கிராமத்தின் முதலாவது பல்கலைக்கழக மாணவரான, மிகவும் வறிய குடும்பத்தைச் சேர்ந்த கிருசாந்தியின் தந்தையார் ஆஸ்துமா நோயினால் தொழிலின்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிராமத்தின் பெரும்பகுதியினர் நாட்கூலிகளாகவும் சீவல்தொழிலாளர்களாகவும் வாழ்க்கையை பெரும் போராட்டத்தின் மத்தியில் கொண்டு செல்கின்றனர்

மடிக்கணனி வழங்கிய நிகழ்வில் feed அமைப்பின் செயற்பாட்டாளர்களான ஆர். தயாபரன், கே. என். இரட்ணலிங்கம் ஆகியோருடன் இலுப்பைக்கடவை வட்டார பிரதேச சபை உறுப்பினர் மு. விஜயபாண்டி,  மகளிர் கிராம அபிவிருத்தி சங்க தலைவர், கோண்டாவிலைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் திரு. குகதாசன்(ராஜன்), திரு. நந்தன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

தனது ஆங்கில மொழிமூலக் கற்கை நெறிக்கு மடிக்கணணி மிக அவசியம் எனத் தெரிவித்த சி. கிருசாந்தி feed அமைப்பினூடாக தனக்கு மடிக்கண்ணியை வழங்கிய வேலாயுதபிள்ளை யோகநாதன் அவர்களுக்கு தனது நன்றிகளை தெரிவித்ததோடு கல்வியில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள தனது கிராமத்தின் கல்வி வளர்ச்சிக்கு தன்னாலான ஒத்துழைப்பை வழங்குவேன் எனவும் உறுதிபடத் தெரிவித்தார்.


மேலும்....

நிறுவனத்தின் செயற்பாடுகள்

வடமாகாணம்

கிழக்கு மாகாணம்

கல்வி

அறிவித்தல்கள்

செயற்படும் பிரதேசங்கள்

செயற்திட்டங்கள்

ஆவணங்கள்

 
Support : Copyright © 2016. FEED Sri Lanka ( Non Profitable Organization ) - All Rights Reserved
Site Designed by Creating Website Inspired Support
Proudly powered by SLTNN