கனரக வாகனத்தின் உதவியுடன் துப்புரவு

பாவற்குளம் கிராமத்தின் பொதுமக்கள் மற்றும் பாவற்குளம் வைத்தியசாலை அதிகாரிகளின் வேண்டுகோளின் அடிப்படையில்,  புலம்பெயர்ந்து வாழும் பாவற்குளம் உறவுகளின் அனுசரணையுடன், பாவற்குளம் வைத்தியசாலையின் பற்றைகள் நிறைந்திருந்த சுற்றாடல்,    கனரக வாகனத்தின் உதவியுடன் துப்புரவு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
இலண்டனில் வாழும் பாவற்குளம் உறவுகளின் இணைப்பாளர் திரு. சுட்டா அவர்களினதும், கல்வி,பொருளாதார அபிவிருத்தி அமைப்பு ( FEED) இனதும் நிதியுதவியுடன் அபிவிருத்தி உத்தியோகத்தர், வைத்தியசாலை அதிகாரிகள் ஆகியோரினது கண்கானிப்பின் கீழ் துப்புரவுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
துப்புரவு செய்யப்பட்ட பிரதேசத்தில் மரக்கன்றுகள்  நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மிக விரைவில் பயன் தரும் மரக்கன்றுகள் நடப்பட்டு, துப்புரவு செய்யப்பட்ட பிரதேசம் வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்படும் நிகழ்வு இடம்பெறும் என கல்வி, பொருளாதார அபிவிருத்தி அமைப்பு ( FEED)இன் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்
**பாவற்குளம் பொது வைத்தியசாலையின்  சூழலை துப்பரவாக்க முன்பும், பின்பும் உள்ள நிலமையை உணர்த்தும் சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக!**

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *