திருகோணமலை, முதலிக்குளம் 1 ம் கண்டம் பிரதேசத்தில் முன்பள்ளி ஒன்று FEED அமைப்பின் உதவியுடன் ஆரம்பம்

திருகோணமலை மாவட்டத்தில்,  சிங்கள மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிருக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்ட  சேருவிலைத் தொகுதியில் அமைந்துள்ள முதலிக்குளம் (மொரவேவ) பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள கிராமம், முதலிக்குளம் 1 ம் கண்டமாகும்.
தற்போதைய நிலையில், முப்பது குடும்பங்கள் வாழும் இப் பிரதேசத்தில், கிராம அபிவிருத்திச் சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க, 15 சிறார்களுடன் இயங்கக்கூடிய வகையில், முன்பள்ளி ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இதுவரை இப் பிரதேச மக்கள் முன்பள்ளி வசதிக்காக ஐந்து கி.மீ வரையில் பயணிக்க வேண்டியிருந்தது.
கிராமத்தில் ஏற்கனவே காணப்பட்ட கட்டிடமும், சூழவுள்ள பகுதிகளும் கடந்த 03 ம் திகதி பிரதேச மக்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற சிரமதானம் மூலம் சீர் செய்யப்பட்டன. 
06.02.2019 அன்று நடைபெற்ற, முன்பள்ளியின் ஆரம்ப நிகழ்வில், FEED அமைப்பின் செயற்பாட்டாளர் T. சசிதரன் ( கனடா ), கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் K. இலிங்கராஜா, செயலாளர் S. யவனராஜா, பிரதேச சபை உறுப்பினர் திரு. S. சசிக்குமார், ஆசிரியை L. சுபாஜினி, சமூக ஆர்வலர் K. தனுஷியா மற்றும் கிராம மக்களும் கலந்து கொண்டிருந்தனர்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *