தோப்பூர், நல்லூர் பிரதேசத்தில் அமைந்துள்ள வாணி முன்பள்ளியின் செயற்பாடுகளுக்கு வழங்கத் தீர்மானம்

மூதூர் கல்வி வலயத்திற்குட்பட்ட நல்லூர் பிரதேசத்தில் அமைந்துள்ள வாணி முன்பள்ளியின் கல்வி நடவடிக்கைகளுக்கு இயன்றளவு உதவிகளை வழங்குவதற்கு கல்விப் பொருளாதார அபிவிருத்தி அமைப்பு (FEED ) தீர்மானம் மேற்கொண்டுள்ளது.
கூலித்தொழிலில் ஈடுபடுபவர்களை அதிகமாக கொண்டுள்ள, மிகவும் வறிய பிற்படுத்தப்பட்ட கிராமமான நல்லூரின் வாணி முன்பள்ளியில் 28 சிறார்கள் கல்வி கற்கிறார்கள். இரண்டு ஆசிரியர்கள் கற்பிக்கின்றனர்.
இந் நிலையில், ஆரம்ப நடவடிக்கையாக, கற்பிக்கும் இரண்டு ஆசிரியர்களுக்குமான மாதாந்த ஊக்குவிப்புத் தொகையாக தலா ரூ 4,000/-  ஐ தை மாதம் முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான நிதியினை பிரான்ஸில் வதியும் திரு. எட்மண்ட் பவிலுப்பிள்ளை அவர்கள் வழங்க முன்வந்துள்ளார்.
ஏற்கனவே, கடந்த ஆண்டு இம் முன்பள்ளி ஆசிரியைகளின் போக்குவரத்துப் பிரச்சினையை தீர்த்து வைப்பதற்காக இரண்டு சைக்கிள்களை திரு. எட்மண்ட் அவர்கள் வழங்கி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *