பல்கலைக்கழக மாணவர்களுடனான FEED அமைப்பின் சந்திப்பும்,கலந்துரையாடலும்-2019

கல்வி, பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் பிரதான செயற்பாடுகளில் ஒன்றான,  நெருக்கடியான பொருளாதார நிலைமைக்குள் வாழும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான உதவித்திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் மாணவர்கள் உடனான சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு, 20.04.2019 அன்று வவுனியாவில் நடைபெற்றது.
தவிர்க்கமுடியாத காரணங்களால் சமூகமளிக்காத ஒரு சில மாணவர்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து மாணவர்களும் தமது பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஒருவருடன் நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்தனர்.
FEED அமைப்பின் தலைவர் க. நா. இரட்ணலிங்கம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டிருந்த வவுனியா நீர்ப்பாசன பொறியியலாளர் திரு. சின்னையா அமிர்தசீலன் மற்றும் முல்லத்தீவு சிறீசுப்பிரமணியம் வித்தியாலய அதிபர் திரு நல்லையா அமிர்தநாதன் ஆகியோருடன் FEED அமைப்பின் செயலாளர் திரு. ஐ. யசோதரன் அவர்களும் சிறப்புரைகளை ஆற்றியிருந்தனர்.
நிகழ்வில், வளவாளர்கள் மாணவர்களின் எதிர்காலம் குறித்த பல்வேறு விடயங்களை மாணவர்களுக்கு தெளிவுபடுத்தியிருந்ததோடு மாணவர்களின் கேள்விகளுக்கு பதில்களை வழங்கியிருந்ததோடு கருத்துகளையும் பகிர்ந்து கொண்டிருந்தனர்.
வடக்கு கிழக்கின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் வருகை தந்திருந்த பல்கலைகழக மாணவர்கள் தங்கள் கருத்துகளை தனித் தனியே முன்வைத்திருந்தனர். பெற்றோர் சார்பிலும் உரை நிகழ்த்தப்பட்டிருந்தது. 
நிகழ்வின் இறுதியில்,  FEED அமைப்பின் ஏனைய செயற்திட்டங்கள், மாணவர்கள் கல்விச்சமூகத்தின் வளர்ச்சிக்கு ஆற்ற வேண்டிய கடமைகள்,  ஒவ்வொன்று பற்றியும் விரிவாக எடுத்துக் கூறியிருந்த FEED அமைப்பின் பொருளாளர் திரு. இ. தயாபரன் பல்கலைகழக மாணவர்களுக்கு மாதாந்த நிதியுதவியை வழங்கி வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கு பாராட்டை தெரிவித்ததோடு  நிகழ்வுக்கான நன்றியுரையினை நிகழ்த்தியிருந்தார்.
நிகழ்வில் கலந்துகொண்டிருந்த மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் போக்குவரத்துச் செலவினை FEED அமைப்பு பொறுப்பெடுத்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
*FEED அமைப்பால் நடைமுறை படுத்தப்படும் கல்வியை மேம்படுத்தும் இத்திட்டத்திற்கான உங்கள் ஆரோக்கியமான அறிவுரையும், அபிப்பிராயங்களையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். contact EMAIL: info@feedtamils.org

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *