புதியகுடியிருப்புக் கிராமத்தில் வறிய குடும்பத்துப் பெண்களுக்கும், முள்ளியவளை பாரதி இல்ல மகளிருக்கும் புடவை வகைகள் வழங்கிவைப்பு

கடந்த 09.03.19 அன்று, முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்புப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட புதியகுடியிருப்பு கிராமத்தில் வாழும் வறுமைக்கோட்டுக்குட்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 50 பெண்களுக்கு,  அவர்களுக்கான உடுபுடவைகள், கல்வி, பொருளாதார அபிவிருத்தி அமைப்பு ( FEED) இனால் வழங்கிவைக்கப்பட்டன.அதேநாளில், முள்ளியவளை பாரதி மகளிர் இல்லத்தைச் சேர்ந்தவர்களுக்கும் உடுபுடவைகள் வழங்கி வைக்கப்பட்டன.கனடா, ரொரன்ரோ நகரில் வதியும் ‘ஆரத்தி சுப்பர் மார்க்கட்’ நிறுவனத்தின் உரிமையாளர் திரு. சார்ள்ஸ் அவர்களினால் அனுப்பி வைக்கப்பட்டிருந்த புடவை வகைகளே இரு இடங்களிலும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.இரு நிகழ்வுகளிலும்,  FEED அமைப்பின் பொருளாளர் இ. தயாபரன், கரைதுறைப்பற்று பிரதேச சபைத் தலைவர் க. தவராசா, FEED அமைப்பின் பிராந்திய இணைப்பாளர் நகுலன், சமூக ஆர்வலர் பஞ்சலிங்கம் சிறீதரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

 

 

 

 

 

 
 
 
 
Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *