முல்லைத்தீவு, கருநாட்டுக்கேணி, கற்பகவிநாயகர் முன்பள்ளியின் செயற்பாடுகளுக்கு FEED அமைப்பினூடாக புதிய அனுசரணையாளர் ஆதரவு

2016ம் ஆண்டு தொடக்கம்,  தொடர்ச்சியாக கல்வி, பொருளாதார அபிவிருத்தி அமைப்பு ஆதரவளித்து வரும்,  முல்லைத்தீவு மாவட்டத்தின் கருநாட்டுக்கேணி பிரதேசத்தில் அமைந்துள்ள கற்பக விநாயகர் முன்பள்ளியின் செயற்பாடுகளுக்கு 2019 ஆண்டின் தை மாதம் தொடக்கம் புதிய அனுசரணையாளர் ஆதரவு வழங்கவுள்ளார்.
கனடா, ரொரன்ரோவில் வதியும் திரு. மயூரன் தர்மபாலன் அவர்களே பாடசாலையின் கற்பித்தல் நடவடிக்கைகளுக்கான கொடுப்பனவையும், பாடசாலை மேம்பாட்டுக்கான தனது ஆதரவை வழங்க முன்வந்துள்ளார்.
FEED அமைப்பும், முன்பள்ளிச் சமூகமும் தமது உளமார்ந்த நன்றிகளை திரு. மயூரன் தர்மபாலனிற்கு தெரிவித்துக்கொள்கின்றன.
Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *