வவுனியா, கோவில்குளம், அகிலாண்டேஸ்வரி அருளகம் இல்லத்தில் உள்ளோருக்கு FEED அமைப்பின் ஊடாக, புலம் பெயர்ந்த உறவின் உதவி

வவுனியா, கோவில்குளம், அகிலாண்டேஸ்வரி அருளகம் இல்லத்தில் உள்ளோருக்கு தேவையான மதிய உணவு மற்றும் பழவகைகள் என்பற்றை கனடா, ரொரன்ரோ நகரில் வதியும் சிம்ஹராஜ்வர்மா நிருத்யா தம்பதிகள் தமது புதல்வி மதுஷாவின் ஐந்தாவது பிறந்த நாளையொட்டி (14.03.2019) வழங்கி வைத்திருந்தனர். 
இல்லத்தில் தங்கியுள்ள 114 முதியோர்களுக்கும், 135 பெண்பிள்ளைகளுக்கும், 65 ஆண் பிள்ளைகளுக்கும் இவை வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இந் நிகழ்விற்கு FEED அமைப்பு அனுசரணை வழங்கியிருந்தது.
மேலும், திருமதி. சிம்ஹராஜ்வர்மா அவர்கள், வறுமைநிலை காரணமாக கல்வியைத் தொடர சிரமப்படும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு மாதாந்த உதவித்தொகை வழங்கும் FEED அமைப்பின் செயற்திட்டத்திற்கும் பங்களிப்பு வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

88 thoughts on “வவுனியா, கோவில்குளம், அகிலாண்டேஸ்வரி அருளகம் இல்லத்தில் உள்ளோருக்கு FEED அமைப்பின் ஊடாக, புலம் பெயர்ந்த உறவின் உதவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *