முள்ளிவாய்க்கால் கிழக்குக் கிராமத்தின் சந்திரன் முன்பள்ளியில் இருந்து எமது அமைப்புக்கு கிடைத்த கோரிக்கை ஒன்றினை உங்களிடம் முன்வைக்கின்றோம்.

அன்பான தாயக உறவுகளுக்கு! முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபை எல்லைக்குட்பட்ட, இறுதி யுத்தத்தை தாங்கி நின்ற கிராமமான முள்ளிவாய்க்கால் கிழக்குக் கிராமத்தின் சந்திரன் முன்பள்ளியில் இருந்து எமது அமைப்புக்கு கிடைத்த கோரிக்கை ஒன்றினை உங்களிடம் முன்வைக்கின்றோம். 29 மாணவர்கள் கல்வி கற்கும் இப் பள்ளியில் மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளுடன் தொடர்புடைய பொருட்களை பாதுகாத்து வைப்பதற்கு வசதி ஏதுமின்றி ஆசிரியர்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். அதன் காரணமாக, வகுப்பறைகளில் வைக்கக்கூடிய திறந்த அலுமாரி போன்றதொரு தளபாட வசதியை கோரியுள்ளார்கள்.  அதற்கான செலவீனமாக இருபதினாயிரம் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த காலங்களைப் போலவே, எமது சமூகத்தின் முன்பள்ளிச் சிறார்களின் திறன்விருத்தி சார்ந்த அபிவிருத்திக்காக முன்னெடுக்கக்கூடிய ஒரு செயற்திட்டத்திற்கு உங்கள் பெறுமதியான ஆதரவினை FEED அமைப்பு எதிர்பார்க்கிறது.

Read more

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கைவேலி கிராமத்தின் காந்தன் முன்பள்ளியின் கோரிக்கை..

அன்பான தாயக உறவுகளுக்கு! முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பின்தங்கிய கிராமமான கைவேலி கிராமத்தின் முன்பள்ளியில் இருந்து எமது அமைப்புக்கு கிடைத்த கோரிக்கை ஒன்றினை

Read more

பொருளாதார நெருக்கடிக்குள் வாழும் வசதியற்ற மக்களின் மரணச்சடங்குகளுக்கு உதவும்”மரண ஆதாரச்சேவை” க்கான உதவி கோரல் வரைபு.

அன்பான தாயக உறவுகளுக்கு! அம்பாறை மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய, அதி கஷ்டப் பிரதேசங்கள் நிறைந்துள்ள ஆலையடிவேம்பு பிரதேசசபை எல்லைக்குள் வாழும் சமூக ஆர்வலர்களிடம் இருந்து எமது அமைப்புக்கு

Read more

பாவற்குளம் பாரதி முன்பள்ளிச் சிறார்களின் கற்றலுக்கான மேசைகள் வழங்கிவைப்பும், பாவற்குளம் வைத்தியசாலையின் நிலைமை பற்றிய ஆராய்வும்

தமிழ் மக்கள் முழுமையாக இடம்பெயர்ந்து, நீண்ட பல வருடங்களின் பின்பு மீள்குடியேறிய பாவற்குளம் பிரதேசத்தில்,  பாடசாலை வளாகத்திற்குள் இயங்கிவரும் பாரதி முன்பள்ளியில் கல்வி கற்று வருகின்ற மாணவர்களின்

Read more

செங்கற்படை கோரிக்கை

அன்பான தாயக உறவுகளுக்கு, 02/06/2018 அன்று வவுனியா, வேலன்குளம் செங்கல்படை திருக்குமரன் வித்தியாலயத்திற்கு feed அமைப்பினர் சென்றிருந்தபோது, பாடசாலையின் மிக அவசியமான தேவையாக உள்ள நீர்ப் பிரச்சினை

Read more

அன்பான தாயக உறவுகளுக்கு

எமது feed அமைப்பிடம், கல்வித்துறை சார்ந்து முன்வைக்கப்பட்ட மற்றுமொரு கோரிக்கையினை உங்கள் முன்வைக்கிறோம். கடந்தகாலங்களைப் போலவே feed அமைப்பு, எமது சமூகத்தின் கல்வித்துறை சார்ந்த அபிவிருத்திக்காக உங்கள்

Read more

தம்பலகமம் சிவசக்திபுரம் அ.த.க பாடசாலையை மேம்படுத்துவோம்

திருகோணமலை மாவட்டத்தில், தம்பலகமம் பிரதேச செயலகப் பிரிவின் மீராநகர் (228 H)கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட தமிழ்க் கிராமமே சக்திபுரம். 45 குடும்பங்கள் வரையிலும் வசித்து வரும் இக்கிராமத்தின், சிவசக்தி அ.த.கபாடசாலையில் கல்விகற்கும் மாணவர்களின் மொத்தத் தொகை இவ்வாண்டில்பதினைந்து பேராகும். அதிபர் உட்பட இரண்டு ஆசிரியர்கள் மாத்திரமே கல்வி கற்பிக்கின்றனர். மேலதிகமாகஅக்கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் தொண்டர் ஆசிரியராக பணியாற்றுகிறார். இவ்வாறான ஒரு பின்னணியில், இப்பாடசாலையின் நிலைமை பற்றி கிழக்கு மாகாணஆளுநருக்கு தெரிவிக்கப்பட்டபோது,  அதை மூடிவிடுவது நன்று என்பதான கருத்துமுன்வைக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்திருந்த நிலையில், உண்மை நிலைமையைஅறியும் பொருட்டு கல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பினர் (FEED) அண்மையில்பாடசாலைக்கு சென்றிருந்தனர்.  அதிபரின் கூற்றின்படி, அவ்வாறான துரதிஸ்டவசமான நிலைமை ஏற்படாது என அவர்நம்புகிறார். மேலும் இவ்வருடம் இன்னொரு ஆசிரியை பாடசாலைக்கு திணைக்களத்தால்நியமிக்கப்படுவார் எனவும் தெரிவிக்கிறார்.  எமது அவதானிப்பில், அண்ணளவாக 45 குடும்பங்கள் மாத்திரம் உள்ள இக்கிராமத்தில்மாணவர்களின் தொகை பெருமளவு அதிகரிக்க வாய்ப்பில்லை. மேலும் இப்பாடசாலைக்குஅண்மையில், ஒப்பீட்டளவில் வளங்கள் அதிகமாகவுள்ள இரண்டு முஸ்லிம்பாடசாலைகள் உள்ளன.  பாடசாலையை மேம்படுத்துவதற்குரிய ஒரே வழி, பாடசாலைச் சூழலை சீர்செய்தலும்,அதன் மூலம் பாடசாலை சம்பந்தமான பெற்றோரினதும், கிராம மக்களினதும் ஈடுபாட்டைஅதிகரித்தலுமே ஆகும். அவ்வாறான மாற்றம் ஏற்படும் பட்சத்தில் இன்னும் அதிகமானமாணவர்களும், கடமை புரியக்கூடிய ஆசிரியர்களும் பாடசாலைக்கு கிடைக்கவாய்ப்புள்ளது.  மரங்கள் முளைத்து நிற்கும் கிணறு, பனைமரம் மறைத்த பெயர்ப்பலகை, சீரற்ற வேலி,நிறம் மாறியுள்ள வர்ணப் பூச்சுகள், பாடசாலையின் பின்புறமுள்ள பற்றைகள்,நீர்விநியோக தொகுதி என்பன முதலில் மறுசீரமைக்கப்பட்டு பாடசாலை புதுப் பொலிவுபெற வேண்டும்.  ஏற்கனவே,  வவுனியா பாவற்குளம் மகாவித்தியாலயத்தின் இதேபோன்ற நிலைமைகள்பலராலும் உணரப்பட்டு (FEED அமைப்பும் சுட்டிக்காட்டியிருந்தது) இன்று பாவற்குளம்சார்ந்த புலம்பெயர் உறவுகளால் அப்பாடசாலை புதுப்பொலிவு பெறும் வாய்ப்புகள்உருவாகியுள்ளன. அதேபோன்ற ஓர் உணர்வையும், செயற்பாட்டையும் நாம் தம்பலகமம்புலம்பெயர் உறவுகளிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.  பாடசாலையின் மேம்பாட்டுக்கு அனைத்து வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்க FEEDஅமைப்பினராகிய நாம் என்றும் தயாராக உள்ளோம் என்பதையும் சம்பந்தப்பட்டதரப்பினருக்கு தெரிவித்துக் கொள்கிறோம். நிர்வாகம் FEED.

Read more