முள்ளிவாய்க்கால் கிழக்குக் கிராமத்தின் சந்திரன் முன்பள்ளியில் இருந்து எமது அமைப்புக்கு கிடைத்த கோரிக்கை ஒன்றினை உங்களிடம் முன்வைக்கின்றோம்.

அன்பான தாயக உறவுகளுக்கு! முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபை எல்லைக்குட்பட்ட, இறுதி யுத்தத்தை தாங்கி நின்ற கிராமமான முள்ளிவாய்க்கால் கிழக்குக் கிராமத்தின் சந்திரன் முன்பள்ளியில் இருந்து எமது அமைப்புக்கு கிடைத்த கோரிக்கை ஒன்றினை உங்களிடம் முன்வைக்கின்றோம். 29 மாணவர்கள் கல்வி கற்கும் இப் பள்ளியில் மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளுடன் தொடர்புடைய பொருட்களை பாதுகாத்து வைப்பதற்கு வசதி ஏதுமின்றி ஆசிரியர்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். அதன் காரணமாக, வகுப்பறைகளில் வைக்கக்கூடிய திறந்த அலுமாரி போன்றதொரு தளபாட வசதியை கோரியுள்ளார்கள்.  அதற்கான செலவீனமாக இருபதினாயிரம் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த காலங்களைப் போலவே, எமது சமூகத்தின் முன்பள்ளிச் சிறார்களின் திறன்விருத்தி சார்ந்த அபிவிருத்திக்காக முன்னெடுக்கக்கூடிய ஒரு செயற்திட்டத்திற்கு உங்கள் பெறுமதியான ஆதரவினை FEED அமைப்பு எதிர்பார்க்கிறது.

Read more

முல்லைத்தீவு, செம்மலை கிழக்கு, நாயாறு முன்பள்ளிக்கு கல்வி, பொருளாதார அபிவிருத்தி அமைப்பு (FEED) அனுசரனை.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆழிப்பேரலையாலும், ஆயுத மோதல்களாலும் மோசமாக பாதிக்கப்பட்டு மீண்டும் தொடர்ச்சியாக பல்வேறு இன ரீதியான நெருக்குவாரங்களுக்கு முகம் கொடுத்துக்கொண்டிருக்கும் நாயாறு பிரதேசத்திற்குரிய முன்பள்ளியின் கல்விச் செயற்பாடுகளுக்கு அனுசரனை வழங்க கல்வி, பொருளாதார அபிவிருத்தி அமைப்பு (FEED) முன்வந்துள்ளது. இருபது சிறுவர்கள் கல்வி பயிலும் இம் முன்பள்ளியின் செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்குமாறு பாலர் பாடசாலை நிர்வாகம், கிராம அபிவிருத்திச் சங்கம், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம் என்பன வேண்டுகோள் விடுத்ததை அடுத்து FEED அமைப்பின் செயற்பாட்டாளர்கள் அங்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்திருந்தனர். அதனடிப்படையில் முன்பள்ளியின் கற்பித்தல் நடவடிக்கைக்கு ஆதரவு வழங்க தீர்மானிக்கப்பட்டது. பள்ளியில் கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இரண்டு ஆசிரியைகளுக்கும் மாதாந்தம் நான்காயிரம் ரூபா வீதம் ஊக்குவிப்புத் தொகையினை புரட்டாதி மாதம் ( இம்மாதம் ) முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதியினை, சுவிஸ் நாட்டின் சூரிச் நகரில் வதியும், தமிழர் கலாச்சார மன்றத்தின் பிரதானி திரு. செல்லையா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் வழங்கியுள்ளார். திரு. செல்லையா கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு FEED அமைப்பும்,  நாயாறு முன்பள்ளி நிர்வாகமும், பெற்றோர்களும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.

Read more

கிழக்குப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவனின் கற்கை நெறிக்கு FEED அமைப்பினால் கணணி வழங்கி வைக்கப்பட்டுள்ளது

முல்லைத்தீவு, முத்தையன்கட்டுப் பகுதியில் இருந்து பல்கலைக்கழக கற்கைநெறிக்கு தெரிவாகி கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் கற்றுவரும்,  பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்படுகின்ற மாணவர் ஒருவர் கணணியின் தேவை குறித்து FEED

Read more

அறநெறிக்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பாடசாலைகள் என்பவற்றை பாராட்டி கௌரவித்து ‘ தேசிய சேவை மேன்மை விருதுகள் ( 2018 )’ வழங்கும் நிகழ்வு

இலங்கை நாட்டின்,  இந்து சமய அறநெறிக் கல்விக்கு உன்னதமான பங்களிப்புச் செய்த இந்து சமய அறநெறிக்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பாடசாலைகள் என்பவற்றை பாராட்டி கௌரவித்து ‘ தேசிய சேவை மேன்மை விருதுகள் ( 2018 )’  வழங்கும் நிகழ்வு, தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாட்டு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சின் இந்து சமய கலாச்சார திணைக்களத்தால் நடாத்தப்பட்டது. இதன்போது,  அறநெறிக் கல்விக்கு அர்ப்பணிப்புச் சேவையை சிறப்பாக வழங்கி வருவதற்காக, ஒட்டுசுட்டான் ஆதிகணபதி அறநெறிப் பாடசாலைக்கும்,  அதன் பிரதான ஆசிரியை திருமதி இ. சந்திரவதனா அவர்களுக்கும் விசேட பாராட்டுப் பத்திரங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. ஆதிகணபதி அறநெறிப் பாடசாலையின் ஆசிரியைகளுக்கான மாதாந்த ஊக்குவிப்புக் கொடுப்பனவை, FEED அமைப்பின் மூலம்,  கனடா ரொரன்ரோவில் வதியும் திரு. பால்ராஜ் சிவசுப்ரமணியம் அவர்கள் வழங்கி வருவதும்,  பாடசாலையின் கற்பித்தல் நடவடிக்கைகளில் feed அமைப்பானது 2016 ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக பங்களிப்பு செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Read more

கிளிநொச்சியில் அமைந்துள்ள ஜேர்மனி தொழில்நுட்ப கல்லூரிக்கு 250 மாணவர்களை புதிதாக இணைக்க இருக்கின்றார்கள்

கிளிநொச்சியில் அமைந்துள்ள ஜேர்மனி தொழில்நுட்ப கல்லூரிக்கு 250 மாணவர்களை புதிதாக இணைக்க இருக்கின்றார்கள்.இதற்க்கு அடிப்படைத் தகுதி க.போ.தா சாதாரண தரத்தில் 6 பாடங்களில் சித்தி போதுமானது .

Read more

பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கிய குடும்பங்களில் பல்கலைகழகத்திற்கு தெரிவாகி கல்வியை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம் 2019. முக்கிய குறிப்பு: செப்ரம்பர் 6 ம் திகதிக்கு பின் வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்பதை கவனத்தில் கொள்ளவும்

முக்கிய குறிப்பு: செப்ரம்பர் 6 ம் திகதிக்கு பின் வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்பதை கவனத்தில் கொள்ளவும்

Read more

FEED அமைப்பின் கல்வி அபிவிருத்தி நடவடிக்கைக்கு நெடுந்தீவு ஒன்றிய ஐக்கியராச்சிய தலைவர் கந்தையா புண்ணியமூர்த்தி உதவி அளித்துள்ளார்.

இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களின், தமிழ்ப் பாடசாலைகள், முன்பள்ளிகளில் கல்வி பயிலும், வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்களின் எதிர்காலத்த்தை உறுதிப்படுத்தும் நோக்கில் FEED  அமைப்பு பல்வேறு முயற்சிகளை

Read more

கல்வி, பொருளாதார அபிவிருத்தி அமைப்பு (FEED) அனுசரணை வழங்கும் செம்மலை சரிதா முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு நிகழ்வு

கல்வி, பொருளாதார அபிவிருத்தி அமைப்பு (FEED) அனுசரணை வழங்கும் செம்மலை சரிதா முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு நிகழ்வு ஆடி மாதம் 29ம் நாள் சிறப்பாக இடம்பெற்றது. முன்பள்ளியின்

Read more

கல்வி, பொருளாதார அபிவிருத்தி அமைப்பு (FEED) இன் அனுசரணையிலான முன்பள்ளிகளின் சிறார்களுக்கான சீருடைக்கு கனடாவில் வாழும் தாயக உறவின் உதவி.

கல்வி, பொருளாதார அபிவிருத்தி அமைப்பு (FEED) இன் அனுசரணையில் இயங்கும் முன்பள்ளிகளில் கல்வி கற்கும் சிறார்களுக்கென வடிவமைக்கப்பட்ட பொதுவான சீருடையை வழங்கும், அமைப்பின் சிந்தனைக்கேற்ப, முன்பள்ளிச் சிறார்களுக்குரிய

Read more