அறநெறிக்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பாடசாலைகள் என்பவற்றை பாராட்டி கௌரவித்து ‘ தேசிய சேவை மேன்மை விருதுகள் ( 2018 )’ வழங்கும் நிகழ்வு

இலங்கை நாட்டின்,  இந்து சமய அறநெறிக் கல்விக்கு உன்னதமான பங்களிப்புச் செய்த இந்து சமய அறநெறிக்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பாடசாலைகள் என்பவற்றை பாராட்டி கௌரவித்து ‘ தேசிய சேவை மேன்மை விருதுகள் ( 2018 )’  வழங்கும் நிகழ்வு, தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாட்டு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சின் இந்து சமய கலாச்சார திணைக்களத்தால் நடாத்தப்பட்டது. இதன்போது,  அறநெறிக் கல்விக்கு அர்ப்பணிப்புச் சேவையை சிறப்பாக வழங்கி வருவதற்காக, ஒட்டுசுட்டான் ஆதிகணபதி அறநெறிப் பாடசாலைக்கும்,  அதன் பிரதான ஆசிரியை திருமதி இ. சந்திரவதனா அவர்களுக்கும் விசேட பாராட்டுப் பத்திரங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. ஆதிகணபதி அறநெறிப் பாடசாலையின் ஆசிரியைகளுக்கான மாதாந்த ஊக்குவிப்புக் கொடுப்பனவை, FEED அமைப்பின் மூலம்,  கனடா ரொரன்ரோவில் வதியும் திரு. பால்ராஜ் சிவசுப்ரமணியம் அவர்கள் வழங்கி வருவதும்,  பாடசாலையின் கற்பித்தல் நடவடிக்கைகளில் feed அமைப்பானது 2016 ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக பங்களிப்பு செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Read more

FEED அமைப்பின் ஏற்பாட்டில் அறநெறிக் கல்விச் சுற்றுலா

கல்விப் பொருளாதார அபிவிருத்தி அமைப்பு (FEED ) இன் அனுசரணையுடன் இயங்கிவரும் செட்டிக்குளம், கப்பாச்சிக் கிராம அறநெறிப் பாடசாலையின் மாணவர்கள், பாடசாலை ஆசிரியை திருமதி E. இராஜேஸ்வரி

Read more

செட்டிக்குளம், கப்பாச்சிக் கிராமத்தில் அமைந்துள்ள வைத்தியர். இராஜசுந்தரம் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு கல்வி, பொருளாதார அபிவிருத்தி அமைப்பு (FEED) இனால் கற்றல் உபகரணங்கள் அடங்கிய பொதிகள் வழங்கிவைப்பு

கனடா, ரொரன்ரோ நகரைச் சேர்ந்த திரு. திருமதி இராஜேஸ்வரன் ஶ்ரீராணி  தம்பதிகளின்பேரன் லோகன் அவர்களின் பிறந்த தினத்தையொட்டி செட்டிக்குளம், கப்பாச்சிக்கிராமத்தில் அமைந்துள்ள வைத்தியர். இராஜசுந்தரம் அறநெறிப் பாடசாலைமாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் அடங்கிய பொதிகள், FEED அமைப்பின்வேண்டுகோளுக்கிணங்க வழங்கப்பட்டுள்ளன.  24.02.2018 அன்று, வைத்தியர். இராஜசுந்தரம் அறநெறிப் பாடசாலை மண்டபத்தில்அறநெறிக் கல்வி ஆசிரியை திருமதி. E. இராஜேஸ்வரி  தலைமையில் இடம்பெற்றமேற்படி நிகழ்வில், FEED அமைப்பின் பிரதான செயற்பாட்டாளர் கே. என். இரட்ணலிங்கம்,பொருளாளர் ஆர். தயாபரன் கோண்டாவில் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்ககனடாக் கிளை ஒருங்கிணைப்பாளர் தி. கேமநாதன், கனடாவைச் சேர்ந்த எஸ்.ஜெயக்குமார், திரு. மோகனப்பிரியன் ஆகியோருடன்  அறநெறிக் கல்வி பயிலுகின்றமாணவர்களும் அவர்களது பெற்றோரும் கலந்துகொண்டிருந்தனர்.  கப்பாச்சி கிராமத்தில் FEED அமைப்பு மேற்கொண்டு வரும் செயற்பாடுகளுக்கு, நிகழ்வில்கலந்துகொண்ட பெற்றோர்களாலும் மாணவர்களாலும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

Read more