முள்ளிவாய்க்கால் கிழக்குக் கிராமத்தின் சந்திரன் முன்பள்ளியில் இருந்து எமது அமைப்புக்கு கிடைத்த கோரிக்கை ஒன்றினை உங்களிடம் முன்வைக்கின்றோம்.

அன்பான தாயக உறவுகளுக்கு! முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபை எல்லைக்குட்பட்ட, இறுதி யுத்தத்தை தாங்கி நின்ற கிராமமான முள்ளிவாய்க்கால் கிழக்குக் கிராமத்தின் சந்திரன் முன்பள்ளியில் இருந்து எமது அமைப்புக்கு கிடைத்த கோரிக்கை ஒன்றினை உங்களிடம் முன்வைக்கின்றோம். 29 மாணவர்கள் கல்வி கற்கும் இப் பள்ளியில் மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளுடன் தொடர்புடைய பொருட்களை பாதுகாத்து வைப்பதற்கு வசதி ஏதுமின்றி ஆசிரியர்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். அதன் காரணமாக, வகுப்பறைகளில் வைக்கக்கூடிய திறந்த அலுமாரி போன்றதொரு தளபாட வசதியை கோரியுள்ளார்கள்.  அதற்கான செலவீனமாக இருபதினாயிரம் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த காலங்களைப் போலவே, எமது சமூகத்தின் முன்பள்ளிச் சிறார்களின் திறன்விருத்தி சார்ந்த அபிவிருத்திக்காக முன்னெடுக்கக்கூடிய ஒரு செயற்திட்டத்திற்கு உங்கள் பெறுமதியான ஆதரவினை FEED அமைப்பு எதிர்பார்க்கிறது.

Read more

முல்லைத்தீவு, செம்மலை கிழக்கு, நாயாறு முன்பள்ளிக்கு கல்வி, பொருளாதார அபிவிருத்தி அமைப்பு (FEED) அனுசரனை.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆழிப்பேரலையாலும், ஆயுத மோதல்களாலும் மோசமாக பாதிக்கப்பட்டு மீண்டும் தொடர்ச்சியாக பல்வேறு இன ரீதியான நெருக்குவாரங்களுக்கு முகம் கொடுத்துக்கொண்டிருக்கும் நாயாறு பிரதேசத்திற்குரிய முன்பள்ளியின் கல்விச் செயற்பாடுகளுக்கு அனுசரனை வழங்க கல்வி, பொருளாதார அபிவிருத்தி அமைப்பு (FEED) முன்வந்துள்ளது. இருபது சிறுவர்கள் கல்வி பயிலும் இம் முன்பள்ளியின் செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்குமாறு பாலர் பாடசாலை நிர்வாகம், கிராம அபிவிருத்திச் சங்கம், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம் என்பன வேண்டுகோள் விடுத்ததை அடுத்து FEED அமைப்பின் செயற்பாட்டாளர்கள் அங்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்திருந்தனர். அதனடிப்படையில் முன்பள்ளியின் கற்பித்தல் நடவடிக்கைக்கு ஆதரவு வழங்க தீர்மானிக்கப்பட்டது. பள்ளியில் கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இரண்டு ஆசிரியைகளுக்கும் மாதாந்தம் நான்காயிரம் ரூபா வீதம் ஊக்குவிப்புத் தொகையினை புரட்டாதி மாதம் ( இம்மாதம் ) முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதியினை, சுவிஸ் நாட்டின் சூரிச் நகரில் வதியும், தமிழர் கலாச்சார மன்றத்தின் பிரதானி திரு. செல்லையா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் வழங்கியுள்ளார். திரு. செல்லையா கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு FEED அமைப்பும்,  நாயாறு முன்பள்ளி நிர்வாகமும், பெற்றோர்களும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.

Read more

FEED அமைப்பின் கல்வி அபிவிருத்தி நடவடிக்கைக்கு நெடுந்தீவு ஒன்றிய ஐக்கியராச்சிய தலைவர் கந்தையா புண்ணியமூர்த்தி உதவி அளித்துள்ளார்.

இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களின், தமிழ்ப் பாடசாலைகள், முன்பள்ளிகளில் கல்வி பயிலும், வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்களின் எதிர்காலத்த்தை உறுதிப்படுத்தும் நோக்கில் FEED  அமைப்பு பல்வேறு முயற்சிகளை

Read more

கல்வி, பொருளாதார அபிவிருத்தி அமைப்பு (FEED) அனுசரணை வழங்கும் செம்மலை சரிதா முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு நிகழ்வு

கல்வி, பொருளாதார அபிவிருத்தி அமைப்பு (FEED) அனுசரணை வழங்கும் செம்மலை சரிதா முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு நிகழ்வு ஆடி மாதம் 29ம் நாள் சிறப்பாக இடம்பெற்றது. முன்பள்ளியின்

Read more

கல்வி, பொருளாதார அபிவிருத்தி அமைப்பு (FEED) இன் அனுசரணையிலான முன்பள்ளிகளின் சிறார்களுக்கான சீருடைக்கு கனடாவில் வாழும் தாயக உறவின் உதவி.

கல்வி, பொருளாதார அபிவிருத்தி அமைப்பு (FEED) இன் அனுசரணையில் இயங்கும் முன்பள்ளிகளில் கல்வி கற்கும் சிறார்களுக்கென வடிவமைக்கப்பட்ட பொதுவான சீருடையை வழங்கும், அமைப்பின் சிந்தனைக்கேற்ப, முன்பள்ளிச் சிறார்களுக்குரிய

Read more

கோண்டாவில் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையின் உறுப்பினர் வவுனியா, கள்ளிக்குளம் நாவலர் முன்பள்ளிக்கு விஜயம் –

கல்வி,  பொருளாதார அபிவிருத்தி அமைப்பு (FEED)இனால் அனுசரனை வழங்கப்படுகின்ற, வவுனியாமாவட்ட கள்ளிக்குளம் கிராமத்தின் நாவலர்முன்பள்ளிக்கு, அனுசரனைக்கான நிதியை வழங்குகின்ற,கோண்டாவில் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்ககனடாக்கிளையின் உறுப்பினரான திரு. செல்வராஜாசிறீமாறன் அவர்களும் அவரது குழுவினரும் விஜயம்ஒன்றை அண்மையில் மேற்கொண்டிருந்தனர். தமது அனுசரனை மூலம் முன்பள்ளியில்மேற்கொள்ளப்பட்டுவரும் செயற்திட்டங்கள் பற்றிஅறிந்து கொண்டதுடன் முன்பள்ளிச் சிறார்களுக்குரியகற்றல் உபகரணங்களையும் வழங்கியிருந்தனர். திரு. செல்வராஜா சிறீமாறன் அவர்களது குழுவினருடன்கல்வி,  பொருளாதார அபிவிருத்தி அமைப்பு (FEED)இன்செயலாளர் ஐ. யசோதரன் மற்றும் சமூக ஆர்வலர் த.யோகராஜா ஆகியோரும் விஜயத்தில் பங்குகொண்டிருந்தனர்.

Read more

பாவற்குளம் பாரதி முன்பள்ளிச் சிறார்களின் கற்றலுக்கான மேசைகள் வழங்கிவைப்பும், பாவற்குளம் வைத்தியசாலையின் நிலைமை பற்றிய ஆராய்வும்

தமிழ் மக்கள் முழுமையாக இடம்பெயர்ந்து, நீண்ட பல வருடங்களின் பின்பு மீள்குடியேறிய பாவற்குளம் பிரதேசத்தில்,  பாடசாலை வளாகத்திற்குள் இயங்கிவரும் பாரதி முன்பள்ளியில் கல்வி கற்று வருகின்ற மாணவர்களின்

Read more

திருகோணமலை, முதலிக்குளம் 1 ம் கண்டம் பிரதேசத்தில் முன்பள்ளி ஒன்று FEED அமைப்பின் உதவியுடன் ஆரம்பம்

திருகோணமலை மாவட்டத்தில்,  சிங்கள மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிருக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்ட  சேருவிலைத் தொகுதியில் அமைந்துள்ள முதலிக்குளம் (மொரவேவ) பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள கிராமம், முதலிக்குளம் 1

Read more

முன்பள்ளிகளிலிருந்து ஆரம்ப பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களுக்கு, கற்றல் உபகரணங்கள் வழங்கும் செயற்திட்டத்தின் இறுதி நிகழ்வு -10 ( முல்லைத்தீவு, செம்மலை சரிதா முன்பள்ளி )

வருடாந்தம், கல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பு (FEED) முன்னெடுத்து வருகின்ற, தான் அனுசரணை வழங்குகின்ற முன்பள்ளிகளில் இருந்து ஆரம்பப் பாடசாலைக்கு (ஆண்டு 01) செல்லும் மாணவர்களுக்கு,  கற்றல்

Read more